"நாளை கருப்புக் கொடி போராட்டம்! தூத்துக்குடியில் அனைத்து வீடுகளிலும்"

ஸ்டெர்லைட் இல் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து நாளை தூத்துக்குடியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது!
 
"நாளை கருப்புக் கொடி போராட்டம்! தூத்துக்குடியில் அனைத்து வீடுகளிலும்"

தற்போது ஆட்கொல்லி நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்து உள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்க கொரோனா தடுப்பூசிகள் அனைத்து மருத்துவமனைகளிலும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு தற்போது அதிகமாக நாடெங்கும் காணப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் ஆக்சிசன் தேவையும் அதிகரித்தது மட்டுமன்றி ஆக்சிசன் பற்றாக்குறையும் நாடெங்கும் அதிகரித்து உள்ளது. மேலும் தமிழகத்தில் அதன் ஆக்சிசன்  தேவை அதிகரித்ததை தொடர்ந்து தமிழகத்தில் பல வருடங்களாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.sterlite

மேலும் இந்த ஸ்டெர்லைட் ஆலை அங்கு  நான்கு மாத காலத்திற்கு ஆக்சிசன்  உற்பத்தி செய்யவும் அனுமதிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து  நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலை காணப்படும் தூத்துக்குடி மாநகர மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஸ்டெர்லைட்  ஆக்சிசன் உற்பத்திக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து நாளை தூத்துக்குடி வீடுகளில் அனைத்திலும் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்த பிறகு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹரி ராகவன் இத்தகைய தகவலை அறிவித்துள்ளார் மேலும் அனைத்து கட்சி கூட்டத்தை மீண்டும் கூட்டி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி நீதிமன்றத்தில் அளித்த கோரிக்கை விடுக்க கூறியுள்ளார்.ஹரி ராகவன் மேலும் நாளை ஒருநாள் தூத்துக்குடியில் கருப்பு தினம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்

From around the web