பாஜகவின் வேல் யாத்திரை: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

 

நவம்பர் ஆறாம் தேதி முதல் டிசம்பர் ஆறாம் தேதி வரை திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த தமிழக பாஜக திட்டமிட்டது என்பதும் இந்த யாத்திரை நேற்று தொடங்கவிருந்த நிலையில் தமிழக அரசின் தடை காரணமாக நிறுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே 

இருப்பினும் தடையை மீறி வேல் யாத்திரையை நடத்த முயற்சித்த தமிழக பாஜக தலைவர் எல் முருகன் உள்பட பாஜகவினர் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வேல் யாத்திரைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமென பாஜக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது 

chennai hc

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்ற கூறப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த மனுவை சென்னை ஐகோர்ட் விசாரித்தது. இந்த விசாரணையில் இருதரப்பு வாதத்தையும் கேட்ட பின்னர் பாஜகவின் வேல் யாத்திரைக்கு காவல்துறை விதித்த தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பாஜக திட்டமிட்டபடி வேல் யாத்திரையை நடத்த முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

From around the web