விவசாயிகளை அசிங்கப்படுத்தும் பாஜகவின் திட்டங்கள்- ராகுல் காந்தி கண்டனம்

2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி இடைக்கால நிதி அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். இதில் மக்களின் வரவேற்பைப் பெற்ற திட்டம், பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஓர் ஆண்டுக்கு ரூ.6000 கொடுக்கப்படும் திட்டமாகும். ஆனால் இத்திட்டம் விவசாயிகளை அவமானப்படுத்தும் திட்டமாக மட்டுமே உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அதுபற்றி அவர் கூறுகையில், “விவசாயிகள் நாட்டிற்கே சோறு போடுபவர்கள், அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க
 
விவசாயிகளை அசிங்கப்படுத்தும் பாஜகவின் திட்டங்கள்- ராகுல் காந்தி கண்டனம்

2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி இடைக்கால நிதி அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். இதில் மக்களின் வரவேற்பைப் பெற்ற திட்டம், பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஓர் ஆண்டுக்கு ரூ.6000 கொடுக்கப்படும் திட்டமாகும்.

ஆனால் இத்திட்டம் விவசாயிகளை அவமானப்படுத்தும் திட்டமாக மட்டுமே உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அதுபற்றி அவர் கூறுகையில், “விவசாயிகள் நாட்டிற்கே சோறு போடுபவர்கள், அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டியது ஒரு நாட்டின் குடிமகனுக்கு அழகாகும். அவர்களை அவமானப்படுத்தும் ஒரு செயலை நாம் எப்போதும் செய்துவிடக் கூடாது, காங்கிரஸ் அரசு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மிக ச் சிறப்பான திட்டங்களை கொடுத்துள்ளது.

விவசாயிகளை அசிங்கப்படுத்தும் பாஜகவின் திட்டங்கள்- ராகுல் காந்தி கண்டனம்

ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்த விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் விவசாயிகளை அவமானப்படும் செயலாக உள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 நிதி உதவித்தொகை, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் என சிறந்த திட்டங்கள் இடம்பெற்றன.

ஒரு நாளுக்கு 17 ரூபாய் கொடுப்பது விவசாயிகளை உழைப்பை அவமானப்படுத்தும் செயல்; காங்கிரஸ் இதனை ஒருபோதும் அனுமதிக்காது என்று வன்மையாக கண்டித்துள்ளார்.

From around the web