பாஜக அழைப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது: முக அழகிரி

 

முன்னாள் திமுக தலைவர் மு கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி திடீரென கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் ஈடுபட்டு வருகிறார் 

தனது ஆதரவாளர்கள் அனைவரும் தன்னிடம் அப்படியே இருப்பதாகவும் தனது அரசியல் நிலை குறித்த முடிவை மிக விரைவில் தெரிவிப்பேன் என்றும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் 

மேலும் அவர் பாஜகவில் இணைவார் என்றும் தமிழகம் வரும் அமித்ஷா முன் அவர் பாஜகவில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் முக அழகிரி அவர்கள் பாஜகவில் இணைந்தால் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என்று கூறினார் 

amitshah

தனக்கு பாஜகவினர் அழைப்பு விடுத்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக முக அழகிரி தெரிவித்துள்ளார். எனவே 21ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரும்போது அவர் முக அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் பாஜகவில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

முக அழகிரி பாஜகவில் இணையும் பட்சத்தில் தென் மாவட்டங்களில் திமுக வெற்றி பெறுவது பெரும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது

From around the web