போதைப்பொருள் வைத்திருந்த பாஜக ஆதரவு நடிகை கைது!

 

பாஜக ஆதரவு நடிகை ஒருவர் 100 கிராம் போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பாஜகவில் கொலை குற்றவாளிகள், திருட்டு குற்றவாளிகள் சேர்ந்து வருவதாக அரசியல் கட்சி விமர்சகர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் 100 கிராம் போதைப் பொருள் வைத்திருந்ததாக பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்த பமீலா கோஸ்வாமி என்ற நடிகை அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார்

அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் மேலும் அவரது நண்பர் பிரதீப் குமார் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

பாஜக ஆதரவாளரான நடிகை பமீலா கோஸ்வாமி பல பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் தற்போது அவர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி விட்டு ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று செயல்பட்டுவரும் பாஜகவிற்கு அந்த கட்சியின் இளைஞர் அணி செயலாளர் ஒருவரே போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web