சுத்தியல், ஆணியோடு கலெக்டர் ஆபீஸ் வந்த பாஜகவினர் கைது: சேலத்தில் பரபரப்பு

 

தமிழகத்தில் நோட்டாவை கூட தொட முடியாத நிலையில் இருந்த பாஜக தற்போது ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், பாஜக தொண்டர்களும் அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன

சமீபத்தில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் கூடிய ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கூட்டத்தை வைத்து பார்க்கும்போது தமிழகத்தில் பாஜக ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்துவிட்டதாகவே கருதப்படுகிறது 

இந்த நிலையில் சேலம் பகுதியில் திடீரென பாஜகவினர் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் ஆணி, சுத்தியோடு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வைக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்திருப்பதாகவும் தற்போது பிரதமர் படத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைப்பதற்காக ஆணி, சுத்தியோடு வந்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web