"பெரியார் பிறந்த ஈரோடு மண்ணிலேயே பாஜக வெற்றி"-பாஜக மாநில தலைவர்!

பெரியார் பிறந்த ஈரோடு மண்ணிலேயே பாஜக வெற்றி என்று கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் முருகன்!
 
periyar

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் களமிறங்கியிருந்தன. மத்தியில் ஆளும் பாஜக கட்சியானது தமிழகத்தில் அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. மேலும் அதிமுக பாஜகவிற்கு 20 சட்டமன்றத் தொகுதிகளையும் ஒரு மக்களவைத் தொகுதியையும் கொடுத்தது. இந்த நிலையில் மே 2-ஆம் தேதி தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.murugan

இதில் பெரும்பான்மையை பிடித்து திமுக கட்சியானது ஆட்சியைக் கைப்பற்றியது. மேலும் 10 ஆண்டுக்கு பின்னர் தற்போது தமிழகத்தில் உதயசூரியன் உதித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிலையில் களமிறங்கிய பாஜக 20 தொகுதிகளில் போட்டி இருந்தது. அதில் நான்கு தொகுதிகளை பாஜக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டசபைக்கு பாஜக  நுழைய உள்ளது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் இதுகுறித்து பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறினார் தமிழகத்தில் பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டிலேயே பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் கூறினார். மேலும் இதனால் தமிழகத்தின் பாஜகவிற்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜகவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது சென்னையில்,மேலும் இதில் பாஜக மாநில தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் போன்றோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இதற்கு எதிராகவும் கருத்துக்கள் வந்த வண்ணமாக உள்ளது மேலும் அவர் ஈவேரா பிறந்த மண்ணை சுட்டிக்காட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web