பாஜக மூத்த தலைவர் திடீர் மரணம்: தொண்டர்கள் அதிர்ச்சி

 

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த்சிங் சற்றுமுன்னர் காலமானார் என்ற செய்தி அக்கட்சியின் தொண்டர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இன்று காலமான ஜஸ்வந்த்சிங் அவர்களுக்கு 82 வயது என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், பாதுகாப்பு துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

பாஜக தலைவர்களில் முக்கிய தலைவரான இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்பி ஆக இருந்தவர் என்பதும் குறிப்பாக வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் இவர் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பாஜகவை நாடு முழுவதும் வலுப்படுத்த இவர் ஆற்றிய பணி மிகவும் சிறப்பானது என்பதும் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜஸ்வந்த் சிங் சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்று அவருடைய குடும்பத்தினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர் 

ஜஸ்வந்த்சிங் காலமானதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web