நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட தடை கோரி பாஜக!

சட்டமன்ற தேர்தலில் உதயநிதி  ஸ்டாலின் போட்டியிடுவதற்கு தடைகோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜகவினர் புகார்!
 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் இருந்து பல கட்சிகள் பல்வேறு கட்சியுடனும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. தமிழகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருப்பவர் சத்யபிரதா சாகு. மேலும் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் தேர்தல் வேலைகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தின் மிக வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக உடன் கூட்டணியாக மதிமுக,விசிக போன்ற கட்சிகளை வைத்துள்ளது.

dmk

மேலும் திமுகவுடன் தேசிய கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணியாக வைத்துள்ளது. இந்நிலையில் திமுகவில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். மேலும் ஸ்டாலின்  திமுக வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவரது மகனாகிய உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக இந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக அறிவித்தார். மேலும் அவர் சேப்பாக்கம் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

மேலும் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்திருந்தார்.அதற்கெதிராக பாஜகவினர் தற்பொழுது புகார் ஒன்றினை அளித்துள்ளனர். அது என்னவெனில் நடக்க இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் உதயநிதிக்கு போட்டியிட தடை கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். மேலும் அவர்கள் பிரதமர் மோடி பற்றி திமுக வேட்பாளர் உதயநிதி  அவதூறாக  பேசியதாகவும்  தமிழக பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

From around the web