கூட்டணி கட்சியை போட்டுத்தள்ளிய பாஜக: தமிழகத்திலும் இது நடக்குமா?

 

ஒரு மாநிலத்தில் செல்வாக்கு இல்லை என்றால் அந்த மாநிலத்தில் செல்வாக்குடன் உள்ள கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அந்த செல்வாக்கில் தனது கட்சியை வெற்றிபெற வைத்து கூட்டணி கட்சியை போட்டுத் தள்ளுவதுதான் பாஜகவின் வியூகமாக உள்ளது 

ஏற்கனவே இந்த வியூகத்தை திரிபுரா, மேற்குவங்கத்தில் செயல்படுத்திய பாஜக, தற்போது பீகாரில் பயன்படுத்தியுள்ளது. ஐக்கிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்த பாஜக, 110 தொகுதிகளில் போட்டியிட்டது, ஐக்கிய ஜனதா 115 தொகுதிகளில் போட்டியிட்டது

nitesh amit

ஆனால் நேற்று வந்த முடிவுகளின்படி பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் ஐக்கிய ஜனதா தளமும் வெறும் 45 மூன்று இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது

எனவே பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை அதிக இடங்களில் வெற்றி பெற செய்யாமல் ஆனால் அதே நேரத்தில் அந்த செல்வாக்கை வைத்து பாஜக வெற்றி பெற்று தற்போது தனிப்பெரும் கட்சியாக இடம்பெற்றுள்ளது

தமிழ்கத்தில் இதே பாணியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து அதிமுகவை வீழ்த்த பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை
 

From around the web