தமிழர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டது மோடி அரசு என்று கூறும் பாஜக தலைவர்!

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி பற்றி காரைக்குடியில் கூறும் பாஜக தலைவர்!
 
தமிழர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டது மோடி அரசு என்று கூறும் பாஜக தலைவர்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில்ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தேர்தல் வேலைகள் ஆனது மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரியாக உள்ளவர் சத்யபிரதா சாகு. அவர் சில தினங்களாக  பல தகவல்களையும் அவர் அறிவித்திருந்தார். மேலும் தமிழகத்தில் ஆளும் கட்சி அதிமுக  கூட்டணியில் மத்தியில் ஆளும் பாஜக கட்சி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

bjp

அதற்காக அதிமுக பாஜகவிற்கு 20 சட்டமன்ற தொகுதிகளிலும் ,ஒரு மக்களவைத் தொகுதியையும் வழங்கியது. இந்நிலையில் பாஜக தலைவர் முருகன் தாராபுரம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  சில தினங்கள் முன்பு தாராபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில்  நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கூடி இருந்தனர். இந்நிலையில் தற்போது பாஜக தலைவர் ஜேபி நட்டா காரைக்குடியில் பேசியுள்ளார்.

அப்பொழுது அவர் கூறினார் திமுக மற்றும் காங்கிரஸ் ஆகியவை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய கட்சிகள் என அவர் கூறினார். மேலும் தமிழர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டது மோடி அரசு தான் என காரைக்குடியில் பாஜக தலைவர் கூறியுள்ளார். மேலும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தியது பிரதமர் மோடிதான் என்றும் பாஜக தலைவர் கூறியுள்ளார்.மேலும் பாஜகவின் சார்பில் அமித்ஷாவும் தமிழகத்தில் பரப்புரைக்கு வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடியும் கன்னியாகுமரி பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web