14 க்கு பதிலாக 7; வாக்கு எண்ணிக்கை இரண்டு அறைகள்! பாஜக வலியுறுத்தல்!

14 சுற்று வாக்கு எண்ணிக்கையை 7 சுற்றுகளாக இரண்டு அறைகளில் நடக்க வேண்டும் பாஜக வலியுறுத்தல்!
 
14 க்கு பதிலாக 7; வாக்கு எண்ணிக்கை இரண்டு அறைகள்! பாஜக வலியுறுத்தல்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்று முடிந்தது. சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்தது குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக கட்சியானது அதிமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது.மேலும் அதிமுக தரப்பிலிருந்து பாஜகவிற்கு 20 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு மக்களவைத் தொகுதி கொடுக்கப்பட்ட நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தன. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு மத்தியில் கண்காணிக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

vote

மே இரண்டிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.  காரணம் என்னவெனில் தமிழகத்தில் கொரோனாவின் அதிகரிப்பும் சில வாரங்களாக உயர்ந்துள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை குறித்து பல்வேறு வதந்திகள் வந்தன.  தலைமை தேர்தல் அதிகாரி தமிழகத்தில் மே இரண்டாம் தேதி கொரோனா கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும்கூறினார். சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் ஆலோசனையில் வாக்கு எண்ணிக்கை காண சுற்றுகள் கூடபட்டதாக கூறப்பட்டது.

அதன்படி சென்னையில் உள்ள 13 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை சுற்று  குறைக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாக திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது பாஜகவினரும் அதற்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி ஒரு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அறையை இரண்டு அறை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் 14 சுற்று வாக்கு எண்ணிக்கை 7 சுற்றுகள் இரண்டு அறைகளில் நடக்க வேண்டும் என்றும் பாஜகவினர் வலியுறுத்துகின்றனர்.

From around the web