ஸ்டெர்லைட் ஆலைக்கு குரல்கொடுக்கும் பாஜக!காட்டுத் தீயாய் பரவும் எதிர்ப்பலைகள்!

ஆக்சிசன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தும் பாஜகவின் மாநில தலைவர் முருகன்!
 
ஸ்டெர்லைட் ஆலைக்கு குரல்கொடுக்கும் பாஜக!காட்டுத் தீயாய் பரவும் எதிர்ப்பலைகள்!

தமிழகத்தில் முத்து நகரமாக காணப்படுகிறது தூத்துக்குடி மாநகர்.இந்த தூத்துக்குடி மாநகரில் முத்து குளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.மேலும் இங்கு தயாரிக்கப்படும் உப்பானது தமிழகம் மட்டுமின்றி அண்டை நாடுகளுக்கும் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் இத்தகைய சிறப்பு பெற்ற தூத்துக்குடியில் சில வருடங்களுக்கு முன்பாக பொதுமக்கள் ஒரு சிலர் சுட்டுக் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலை பரவியது. காரணம் என்னவெனில் தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.sterlite

மேலும் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத காவல்துறையினர் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர் இதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் .மேலும் குறிப்பாக போராட்டத்தில் கலந்து கொள்ளாத அப்பாவி ஜனங்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் கூறப்படுகிறது. இதனால் இந்த ஸ்டெர்லைட் ஆலையை ஆனது சில வருடங்களாக திறக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் ஆக்சன் பற்றாக்குறை அதிகமாக காணப்படுவதால் இந்த ஆலையின் நிறுவன வேதாந்தா நிறுவனம் தங்களை ஆக்சிசன் தயாரிக்க அனுமதி கோரி வழக்கு தொடுத்துள்ளது.

ஆனால் அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர் .மேலும் அப்பகுதி மக்கள் அனைவரும் மிகவும் எதிர்ப்பலைகள் தெரிவித்துள்ளனர்.  இந்த ஆலைக்கு ஆதரவாக தற்போது  கொடுத்துள்ளது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியளித்தது. அந்த மாநில பாஜக தலைவர் முருகன் ஆலையை திறக்க வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் ஆக்சிசன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மக்களின் அரசியல் தேவைக்காக அரசும் நீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் வரவேற்பு என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் .இதனால் தற்போது இதற்காக விமர்சனங்களும் கண்டனங்களும் தமிழகத்தில் எழுந்துள்ளன.

From around the web