மம்தா பானர்ஜி உதயநிதி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சி தங்களுக்கு வேட்பாளர்கள் அறிவித்து அவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் பல கட்சி வேட்பாளர்கள், கூட்டணி உட்பட பலரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ஆளும் கட்சியான அதிமுக கட்சி மத்தியில் ஆளும் பாஜக கட்சி கூட்டணிவைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. அதற்காக அதிமுக வானது பாஜகவிற்கு 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக முகஸ்டாலின் அறிவிக்கப்பட்டு இருந்தார். மேலும் திமுக உடன் கூட்டணியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்துள்ளது.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகனாகிய உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக போட்டியிட உள்ளார். அதற்காக அவர் சேப்பாக்கம் தொகுதியில் தனது வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவர் மீது பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது. அவர் மீது மட்டுமின்றி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீதும் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
மேலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பிரகாஷ் ஜவடேகர் புகார் அளித்துள்ளார்.மேலும் உதயநிதி ஸ்டாலின் மறைந்த தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் குறித்து அவதூறாக பேசியதாக பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.