"தொலைநோக்கு பத்திரம்" என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்!
 
"தொலைநோக்கு பத்திரம்" என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணியில் சட்டமன்றதேர்தலை சந்திக்க உள்ளன. மேலும் தமிழகத்தில் மிகவும் வலுவான எதிர்க் கட்சியாக உள்ள திமுக கட்சி  தன்னுடன் கூட்டணியாக தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வைத்துள்ளது. மேலும் மதிமுக மற்றும் விசிக போன்ற கட்சி இணையும் கூட்டணியின் வைத்துள்ளது.

bjp

இவர்களுக்கு போட்டியாக தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக கட்சி கூட்டணி ஆக பாஜக கட்சியையும், பாமக கட்சியையும் வைத்துள்ளது. மேலும் பாஜக கட்சிக்கு அதிமுக சார்பில் 20 தொகுதிகளில், பாமக கட்சி அதிமுக சார்பில் 23 தொகுதிகளில் வழங்கப்பட்டிருந்தன. மேலும் அந்த 20 தொகுதிகளிலும் பாஜக கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் தாக்கல் செய்துவிட்டனர்.

 பாஜக சார்பில் பாஜக மாநில தலைவர் முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பூ பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மத்தியில் தற்போது பாஜகவின் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியானது. தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். இது சென்னை கிண்டியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையானது தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

From around the web