தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாஜக நிற்கவில்லை 234 தொகுதிகளிலும் நிற்கிறது!

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாஜக தான் நிற்கிறது கே எஸ் அழகிரி கூறுகிறார்!
 

சட்டமன்ற தேர்தல் அதற்காக பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்த நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவுடன்  பாரதிய ஜனதா கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி வைத்துள்ளது. இதற்கு போட்டியாக தமிழகத்தில் உள்ள எதிர்கட்சியான திமுக கட்சி காங்கிரஸ் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி வைத்துள்ளது.

alagiri

மேலும் சில தினங்களுக்கு முன்பு கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல தலைவர்கள் தங்களது தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவினர் பாஜக கட்சிக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டது. இதுகுறித்து கே எஸ் அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.

அவர் தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் நிற்கவில்லை 234 தொகுதிகளிலும் பாஜக தான் நிற்கப் போகிறது எனவும் கூறுகிறார். நாளை முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை தமிழகம் முழுவது தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவேன் என்றும் கூறுகிறார். மேலும் தமிழ்நாட்டை தமிழகம் ஆள வேண்டுமா? டெல்லி ஆள வேண்டுமா? என்பதே அவரது கேள்வியாகவும் உள்ளதாக கே எஸ் அழகிரி கூறுகிறார்.

From around the web