மதுரையில் பாஜக-விசிக மோதல்! அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த எதிர்ப்பு!

மதுரையில் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த பாஜகவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்  விடுதலை சிறுத்தைகள் கட்சி!
 
மதுரையில் பாஜக-விசிக மோதல்! அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த எதிர்ப்பு!

ஒடுக்கப்பட்டோர் களுக்காக தனது உயிர் இருக்கும் வரை உரிமைக்குரலாக வாழ்ந்து வந்தவர் டாக்டர் பி ஆர் அம்பேத்கார். இவர் தனது பள்ளிப் பருவத்திலேயே கொடுக்கப்பட்டதால் அவன் தன்னைப் போன்று யாரும் ஒடுக்கக்கூடாது என்று எண்ணி கடினமாக படித்து சட்ட மாமேதை ஆக மாறினார். மேலும் இவர் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். மேலும் தற்போது பயன்பாட்டில் உள்ள சட்டங்கள் அனைத்தும் இவரால் உருவாக்கப்பட்டது என்பதே உண்மையாகும்.

ambedkar

அப்பேர்ப்பட்ட உரிமைக்குரல் ஆன அம்பேத்கர் இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடுகிறார். அதற்காக நாடு முழுவதும் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். மேலும் தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் கோயம்பேட்டில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேலும் ஒரு சில தலைவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்திலும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன்படி அம்மா முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு மரியாதை செலுத்தினார். மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் மரியாதை செலுத்தினார்.  தற்போது ஒரு பகுதியில் மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் முயற்சி நடைபெற்றதாக தகவல்.மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவிக்க வந்தனர். ஆனால் இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் பாஜகவினரின் சிலரை விடுதலை சிறுத்தை கட்சியினர் தாக்கியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

From around the web