ஆடிட்டர் குருமூர்த்தி திடீரென சந்தித்த பாஜக பிரபலம்: பரபரப்பு தகவல்

 

தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பாஜக தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி நேற்று திடீரென தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

இந்த நிலையில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி உடன் அவர் ஆலோசனை செய்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாஜகவின் அரசியல் ஆலோசகராக இருந்து வரும் ஆடிட்டர் குருமூர்த்தியை பாஜக தேசிய பொதுச்செயலாளர் இரவி சந்தித்தார். அப்போது தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? அல்லது 234 தொகுதிகளிலும் தனியாக போட்டியிடுவதா? என்பது குறித்து அவர் ஆலோசனை கேட்டு உள்ளதாக தெரிகிறது 

ஆனால் அதிமுக கூட்டணியில் போட்டியிடுவது தான் இப்போதைக்கு நல்லது என ஆடிட்டர் குருமூர்த்தி ஆலோசனை கூறியதாகவும் அதிமுக கூட்டணியில் இருந்து 60 இடங்களில் குறைந்தது பெற்றே ஆக வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என ஆடிட்டர் குருமூர்த்தி ஆலோசனை கூறியதாகவும் கூறப்படுகிறது

சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்த ஆலோசனையில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web