அமித்ஷாவை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாஜக பிரபலம்!

 

கொரோனா வைரஸால் நாடு முழுவதும் உள்ள பல அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்டு வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் அதில் ஒரு சிலர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கூட ஒரு எம்எல்ஏ கொரோனாவால் பலியானார் என்பது குறிப்பிடதக்கது 

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவரான அமித்ஷா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார் என்ற செய்தியைப் பார்த்தோம். அதன் பின்னர் அவர் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டு குணமானார் 

இந்த நிலையில் தற்போது அமித்ஷாவை அடுத்து இன்னொரு பாஜக பிரபலமான உமாபாரதிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் இன்னும் நான்கு நாட்கள் கழித்து தான் மீண்டும் பரிசோதனை செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அடுத்து கொரோனா வைரசால் மேலும் ஒரு பாஜக பிரமுகர் பாதிக்கப்பட்டிருப்பது பாஜக தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web