பாஜக தலைவர்களை பற்றி பேச உதயநிதிக்கு தகுதி இல்லை என்று கூறும் பாஜக வேட்பாளர்!

பாஜக தலைவர்களை பற்றி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்று கூறும் கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் வேலைப்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 234 தொகுதிகளிலும் பல கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் சத்யபிரதா சாகு. தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக-பாஜக கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.

bjp

அதற்காக பாஜகவிற்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது.  கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் சார்பில் வேட்பாளராக வானதி சீனிவாசன் அறிவிக்கப்பட்டார். மேலும் அப்பகுதியில் அவர் உலக நாயகன் கமலஹாசன் எதிர்த்து போட்டியிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி கோவை வந்திருந்தார். மேலும் அவருடன் பல தலைவர்களும் வந்திருந்தனர்.

தற்போது கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பேட்டியளித்துள்ளார். அதன்படி பாஜக தலைவர்களை பற்றி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றும் அவர் கூறினார். மேலும்  உத்திரப்பிரதேச முதல்வர் கோவை வந்தபோது  குறிப்பிட்ட இடத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். மக்களிடையே பிரிவினை வாதத்தை உருவாக்கக் கூடாது எனவும் கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பேட்டியளித்துள்ளார்.

From around the web