அவரக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கொலை மிரட்டல் வழக்கு!

அவரக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. இதில் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் ஆனது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. பல வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணி மத்தியில் ஆளும் பாஜக கட்சியை வைத்துள்ளது.

bjp

மேலும் பாஜகவிற்கு அதிமுக தரப்பிலிருந்து 20 சட்டமன்ற தொகுதி, 1 மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி பாஜக மாநிலத் தலைவர் முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளார். மேலும் ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் உலக நாயகன் கமலஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட உள்ளார்.

மேலும்  அவரக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை அறிவிக்கப்பட்டு அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.  அவர் சில தினங்களாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் தேர்தல் பரப்புரையில் கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரது அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவரக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. மேலும் கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web