கொரோனாவைவிட பெரிய தொற்று பாஜக: மம்தா பானர்ஜி

 

நாடு முழுவதும் தினமும் பல பாலியல் பலாத்காரங்கள் மற்றும் கொலை சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஒருசில நிகழ்ச்சி மட்டுமே அரசியல்வாதிகளால் பெரிதாகபடுகிறது என்பது தெரிந்தது 

டெல்லியில் நிர்பயா பாலியல் பலாத்கார மற்றும் கொலை சம்பவத்திற்கு பின் தற்போது ஹாத்ராஸ் பாலியல் பலாத்கார சம்பவம் நாட்டையே பெரும் பரபரப்பாகியுள்ளது. இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மற்றும் உபி அரசை  கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன

அந்த வகையில் ஹாத்ராஸ் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மிகப்பெரிய பேரணி ஒன்றை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பேரணியில் அவர் கூறியபோது ’கொரோனாவைவிட கொடிய தொற்று பாஜகதான் என்றும் அந்த தொற்றை முதலில் அழிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் 

மேலும் தான் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு செல்வதற்காக தனது சார்பில் ஒரு பிரதிநிதியை அங்கு அனுப்பியதாகவும் ஆனால் அங்கு அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறினார். உத்தரபிரதேசம் சென்ற எங்கள் கட்சியின் பெண் எம்பிக்கள் தாக்கப்பட்டனர் என்றும் பத்திரிகையாளர்கள் தான் இது குறித்த உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் 

பாஜக நாட்டின் மிகப்பெரிய தொற்று என்றும் அது நாட்டையே அழித்து விட்டது என்றும் பாஜக என்ற கொடிய தொற்றிடம் இருந்து நாட்டை நாம் அனைவரும் இணைந்து காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மம்தாவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web