டுவிட்டருக்கு பதில் ‘கூ’வுக்கு மாறிய பாஜக அண்ணாமலை!


 

 

கடந்த சில நாட்களாக மத்திய அரசுக்கும் டுவிட்டர் நிர்வாகத்திற்கும் இடையே பனிப்போர் நடந்து வருவது தெரிந்தது. வேளாண் மசோதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்பவர்களின் கணக்கை நீக்க வேண்டும் என மத்திய அரசு கூறியதற்கு ஒரு சில கணக்குகளை மட்டும் நீக்கிவிட்டு மற்ற கணக்குகளை இயங்க அனுமதித்துள்ளது. இதனால் மத்திய அரசு கடும் அதிர்ச்சியில் உள்ளது 

ஏற்கனவே மத்திய அரசு ’கூ’ என்ற செயலியை அனைவரும் பயன்படுத்துங்கள் என இதன் காரணமாக அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி இந்தியாவின் முன்னணி தலைவர்கள் ’கூ’ செயலிக்கு மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக பாஜகவின் துணை தலைவரான அண்ணாமலை இன்று முதல் தான் ’கூ’ என்ற செயலியில் கணக்கு தொடங்கியுள்ளதாகவும்,அனைவரும் அதில் தன்னை பாலோ செய்யவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

koo

என்னதான் ’கூ’ போன்ற எத்தனை செயலிகள் வந்தாலும் டுவிட்டருக்கு இணையாக எந்த செயலியும் இருக்காது என்றும் அவ்வளவு எளிதில் இந்தியாவில் இருந்து டுவிட்டரை விரட்டி அடிக்க முடியாது என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர் 

ஒருவேளை இந்தியாவில் டுவிட்டர் தடை செய்யப்பட்டால் மட்டுமே அடுத்த செயலியை இந்தியாவில் தேடுவார்கள் என்றும் அதுவரை டுவிட்டர் இந்திய மக்களிடையே பிரபலமாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர்


 

From around the web