பில்கேட்ஸ் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி: மூன்றே டாலர் என தகவல் 

 

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் மிக மோசமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வைரஸில் இருந்து பொதுமக்களை காக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா உள்பட பல நாடுகள் தீவிரமாக உள்ளன

இந்த நிலையில் கொரோனா நோய் தடுப்பூசி தயாரிக்கும் இந்திய நிறுவனம் ஒன்றுடன் பில்கேட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளதாகவும், இதற்காக 300 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

பில்கேட்சின் அறக்கட்டளை இந்திய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து 300 மில்லியன் டாலர் அமெரிக்க டாலர் ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலம் ஏழைகளும் பயன்பெறும் வகையில் இந்த தடுப்பூசியை மிக குறைந்த விலையில் அதாவது மூன்று அமெரிக்க டாலர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய மதிப்பில் சுமார் 200 ரூபாய் முதல் 300 ரூபாய்க்கு ஒரு தடுப்பூசி மருந்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 200 மில்லியன் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்படும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி பெற்ற பிறகு இந்த தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது 

இந்திய நிறுவனத்துடன் இணைந்து பில்கேட்ஸ் நிறுவனம் ரூபாய் 300 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web