செப்டம்பர் 6 வரை ஊரடங்கு திடீரென நீட்டிப்பு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது 7ஆம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இத்துடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் திடீரென செப்டம்பர் 6 வரை ஊரடங்கை பீகார் மாநில அரசு நீட்டித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து அம்மாநிலத்தில்
 

செப்டம்பர் 6 வரை ஊரடங்கு திடீரென நீட்டிப்பு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது 7ஆம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இத்துடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

ஆனால் திடீரென செப்டம்பர் 6 வரை ஊரடங்கை பீகார் மாநில அரசு நீட்டித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து அம்மாநிலத்தில் செப்டம்பர் 6 முறை ஊரடங்கு நீட்டிப்பு என அம்மாநில அரசு திடீரென அறிவிப்பு செய்துள்ளது

ஊரடங்கு நேரத்தில் பொது போக்குவரத்தை அனுமதிக்க முடியாது என்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று பீகார் அரசு அறிவித்துள்ளது. மேலும் விமானம் மற்றும் ரயில் பயணங்கள் தொடரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அலுவலகங்கள் வங்கிகள் மற்றும் பிற அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படலாம் என்று பீகார் மாநில அரசு தெரிவித்துள்ளது

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது என்பதும் அங்கு 537 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web