மு.க.ஸ்டாலினுடன் பிக்பாஸ் பாலாஜி சந்திப்பு! திமுகவில் இணைகிறாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த ஒரே ஆண் போட்டியாளரான பாலாஜி நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பாலாஜி, நேராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த பாலாஜி, அவருடைய மறைவின்போது பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் போனதற்கு வருந்தினார். இந்த நிலையில் கருணாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவித்தது
 

மு.க.ஸ்டாலினுடன் பிக்பாஸ் பாலாஜி சந்திப்பு! திமுகவில் இணைகிறாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த ஒரே ஆண் போட்டியாளரான பாலாஜி நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பாலாஜி, நேராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த பாலாஜி, அவருடைய மறைவின்போது பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் போனதற்கு வருந்தினார். இந்த நிலையில் கருணாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவித்தது மட்டுமின்றி புதிய திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு,.க.ஸ்டாலினுக்கு அவர் வாழ்த்தும் தெரிவித்தார்.

திமுக தலைவர் மூ.க.ஸ்டாலினை பாலாஜி சந்தித்த புகைப்படம் இணையதளங்களில் படுவேகமாக வைரலாகி வருவதை அடுத்து அவர் திமுகவில் இணையவுள்ளதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.

From around the web