சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பெரிய வெங்காயமும் விலை உயரும் அபாயம்!

 

கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது என்பதும் மார்க்கெட்டில் தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் 50 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் பெரிய வெங்காயத்தின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

onion

இது குறித்து வெங்காய வியாபாரிகள் கூறியபோது பருவம் தவறி பெய்த மழையால் வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது என்றும் தற்போது பெரிய வெங்காயம் குவிண்டால் ஒன்றுக்கு 3500 முதல் 4500 ரூபாய் விற்பனையாகி வந்தாலும் வரத்து குறைவு காரணமாக வரும் நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை விற்பனை வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.,

இவ்வாறு மொத்த விற்பனையில் 7 ஆயிரம் வரை பெரிய வெங்காயம் விற்பனை செய்தால் சில்லறை கடைகளில் கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய் வரை பெரிய வெங்காயத்தின் விலை ஏற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை 25 சதவீதம் உயர்ந்துள்ளதால் வெங்காயம் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web