பிக் பாஸா? டாஸ்மாக்கா? இணையத்தில் வைரலாகும் ஹேஷ்டேக்

சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது பிக்பாஸ் நிகழ்ச்சியால் குடும்பங்கள் பாழாகின்றன என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் குடும்பங்கள் உருப்படாது என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்
இந்த விமர்சனத்திற்கு ஏற்கனவே கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிக் பாஸா? டாஸ்மாக்கா? என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு வாரமும் ஒரு நல்ல புத்தகத்தை பரிந்துரை செய்து கல்வியை ஊட்டி கொடுக்கும் வேலையை செய்யும் கமல் மோசமானவரா? அல்லது டாஸ்மாக் மூலம் கமிஷனுக்காக சாராயத்தை ஊற்றிக் கொடுக்கும் தமிழக அரசு மோசமானதா? என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்பது போன்ற கமெண்ட்டுகள் இந்த ஹேஷ்டேக்கில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன
மேலும் படிக்க சொல்பவர் நல்லவரா? குடிக்கச் சொல்லுபவர் நல்லவரா? என்றும், அரசின் குற்றங்களை உரிமையுடன் தட்டிக் கேட்பது நமது பிக்பாஸ், குடித்து சீரழியும் தமிழனை கண்டு ரசிப்பது தமிழக அரசு என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது