தோனிக்கு பாரத ரத்னா விருது: காங்கிரஸ் எம்.எல்.ஏ கோரிக்கை

நேற்று முன் தினம் இந்தியா முழுவதும் 73 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென தல தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அவருடைய இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தோனியின் ஓய்வு அறிவிப்புக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தாலும் அவரது இழப்பு இந்திய அணிக்கு செய்ய முடியாது என அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள்
 

தோனிக்கு பாரத ரத்னா விருது: காங்கிரஸ் எம்.எல்.ஏ கோரிக்கை

நேற்று முன் தினம் இந்தியா முழுவதும் 73 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென தல தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

அவருடைய இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தோனியின் ஓய்வு அறிவிப்புக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தாலும் அவரது இழப்பு இந்திய அணிக்கு செய்ய முடியாது என அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். போபால் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிசி சர்மா அவர்கள் இது குறித்து கூறிய போது மகேந்திரசிங் தோனி அவர்கள் இந்த நாட்டின் விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்றும் அவர் நாட்டின் வெற்றியை அனைத்து நாடுகளிலும் நிலைநாட்டி உள்ளார் என்றும் அவருக்கு உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி வழங்கி கௌரவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் கிரிக்கெட்டின் பெயரை உச்சத்துக்குக் கொண்டு சென்ற தோனிக்கு நாட்டின் உயரிய விருது வழங்குவதில் எந்தவித தவறும் இல்லை என்று பிசி சர்மா தெரிவித்துள்ளார். தோனிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web