சிறந்த நடிகர் தனுஷ் தேசிய விருது! சிறந்த இசையமைப்பாளர் டி இமான் தேசிய விருது!

2019 ஆண்டுக்கான தேசிய விருது அறிவித்தது மத்திய அரசு!
 

2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதான தே தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை பெற முடியவில்லை. இந்நிலையில் மத்திய அரசானது தற்போது 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதினை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழில் வெளியான அசுரன் படம் தேசிய விருது வென்றது. மேலும் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார் .

dhanush

மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை விசுவாசம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி இமான் பெற்றுக்கொண்டார். மேலும் இந்தி மொழியில் வெளியான சிட்சோர் என்ற படமும் தெலுங்கு மொழியில் வெளியான ஜெர்சி என்ற படமும் மலையாளத்தில் வெளியான கள்ள நோட்டம் என்ற படமும் தேசிய விருதை பெற்றுள்ளது. மேலும் பார்த்திபன் இயக்கி, நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு சிறப்பு பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது/

மேலும் திரைப்படத் தயாரிப்புக்கு உகந்த மாநிலமாக சிக்கிம் மத்திய அரசு அறிவித்தது. வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அசுரன் படமானது வெளியாகி நல்லதொரு வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் பல்வேறு விருதுகளை பெற்றுக் கொண்டிருந்தன. இந்நிலையில் அசுரன் படம் அழகு தமிழில் மொழியில் வெளிய சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை பெற்று படக்குழுவினரை சந்தோச படுத்தியுள்ளது.

From around the web