பயம் இருக்கு; அதனால் ஐகோர்ட்டும் கண்காணிக்க வேண்டும்-டிடிவி தினகரன்!

ஸ்டெர்லைட் ஆலையை ஐகோர்ட்டும் கண்காணிக்க வேண்டும் என்று கூறுகிறார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்!
 
பயம் இருக்கு; அதனால் ஐகோர்ட்டும் கண்காணிக்க வேண்டும்-டிடிவி தினகரன்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் புதிதுபுதிதாக தேர்தலை சந்தித்துள்ளன. மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் தான் அதிகம் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக அதிமுக கூட்டணியில் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த கட்சி தேமுதிக, ஆனால் இறுதி நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும் அமமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலில் சந்தித்துள்ளது. மேலும் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அறிவிக்கப்பட்டார்.highcourt

மேலும் அவர் சட்டமன்றத் தொகுதியில் மிகவும் பெயர்பெற்ற கோவில்பட்டி தொகுதியில் அமமுகவின் சார்பில் களமிறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல கட்சிகள் கலந்திருந்தன, மேலும் இக்கூட்டத்தின் முடிவில் அனைத்து கட்சிகளும் ஒரு மனமாக ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்துள்ளனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன் இது குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன்  உற்பத்தியை ஐகோர்ட்டு நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கும் வேலையை செய்கிறார்கள் என்ற பயம் மக்களிடம் உள்ளது. அதனால் ஐகோர்ட்டும் நேரடியாக ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க வேண்டும் என்று கழக செயலாளர் டி டி வி தினகரன் கூறியுள்ளார்.

From around the web