ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல்!இரவு 10 மணி முதல் 72 மணி நேரத்திற்கு மதுக்கடைகள் மூடல்!

ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இரவு 10 மணி முதல் 72 மணி நேரத்திற்கு மதுக்கடைகள் மூடப்பட்டதாக கலால்துறை அறிவிக்கப்பட்டது!
 
ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல்!இரவு 10 மணி முதல் 72 மணி நேரத்திற்கு மதுக்கடைகள் மூடல்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி  தமிழகத்தில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி  நடைபெற உள்ளது.புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. 30 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

tasmac

இதில் பல கட்சிகள் கூட்டணி வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். மேலும் புதுச்சேரியில் தற்போது கலால்துறை ஆனது மகிழ்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி முதல் 72 மணி நேரத்திற்கு புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளது. இதனை சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இதனை கலால் துறை இணைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி புதுச்சேரியில் உள்ள மதுபான கடைகள், மதுபான விடுதிகள் போன்றவற்றிலும் மூடப்பட்டு சீல் வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.மேலும் இந்த சிலை ஆனது ஏப்ரல் 7ஆம் தேதி கலால் துறை மற்றும் காவல்துறை முன்னிலையில் பிரிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதில் ஏதேனும் முறைகேடு ஈடுபட்டால் மதுபான கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கலால் துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web