தமிழகம் முழுவதும் பார்கள் மூடப்படுகிறதா? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன என்பது தெரிந்ததே. இருப்பினும் கடந்த மே மாதம் முதல் சென்னை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர் இருப்பினும் நீதிமன்றம் சென்று உத்தரவை பெற்று தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்தது என்பது தெரிந்ததே இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு
 
தமிழகம் முழுவதும் பார்கள் மூடப்படுகிறதா? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன என்பது தெரிந்ததே. இருப்பினும் கடந்த மே மாதம் முதல் சென்னை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர் இருப்பினும் நீதிமன்றம் சென்று உத்தரவை பெற்று தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன என்பதும், சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறந்தவுடன் டாஸ்மாக் விற்பனை படுஜோராக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மதுபார்களை மூடவேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்த இந்த வழக்கை நீதிமன்றம் சற்றுமுன்னர் தள்ளுபடி செய்துவிட்டது. மதுக் கடைகள் பார்களை மூடுவது மாநில அரசின் கொள்கை என்றும் அதனால் மாநில அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்து இந்த மனுவை தள்ளுபடி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web