"வடமாநில தொழிலாளர்கள் மீது சரமாரி தாக்குதல்" தேமுதிக பிரமுகர்!

சென்னை குன்றத்தூர் அருகே வடமாநில வாலிபர்கள் சரமாரியாக தாக்கிய தேமுதிக பிரமுகர் சுரேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்!
 
dmdk

வந்தாரை வாழவைக்கும் பூமி என்று நம் தாய்த்திரு நாடு தமிழ்நாட்டை அழைப்பர். மேலும் காரணம் என்னவெனில் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் பிழைத்து விடலாம் என்ற எண்ணம் நம் தமிழக மக்கள் மனதில் அதிகமாக உள்ளது. மேலும் இவை தமிழக மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் குறிப்பாக வட இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பெரும்பாலான ஓட்டல்களில் வட மாநில இளைஞர்களே அதிகமாக பணியில் உள்ளனர். மேலும் எங்கு பார்த்தாலும் வடமாநிலங்களில் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. காரணம் என்னவெனில் அவர்கள் மாநிலத்தில் உள்ள வருமானத்தை விட நம் தமிழகத்தில் உள்ள வருமானம் அதிகமாக காணப்படுவதால் அவர்கள் தமிழகத்தையே நாடி வருகின்றனர்.north indians

இத்தகைய நாடுகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடைபெறுகிறது. மேலும் அவர்களை கேட்க ஆள் இல்லாததால் அவர்களை வன்முறையாகவும் கடுமையாகவும் தாக்குதல்  நடைபெறுகிறது.தற்போது தேமுதிக பிரமுகர் ஒருவர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது. அந்தப்படி சென்னை குன்றத்தூர் அருகே வடமாநில வாலிபர்களை சரமாரியாக தாக்கியுள்ளார் தேமுதிக பிரமுகர் சுரேஷ் ராஜ்.

மேலும் தாக்கிய தேமுதிக  பிரமுகரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் சுரேஷ் வீட்டில் தங்கி பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் என்பதும் விசாரணையில் தெரிந்தது. மேலும் அந்த வடமாநில தொழிலாளர்கள் வாடகை தராததால் அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் தனியார் நிறுவனங்களுக்கு வட மாநிலத் தொழிலாளர்களை சப்ளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இதனால் தன்னை நம்பி வந்தவர்களை தற்போது வன்முறையாக தாக்கியுள்ளார் சுரேஷ் ராஜ் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web