மருத்துவரை காட்டுமிராண்டித்தன தாக்குதல்!! "24 பேர் கைது-முதல்வர் உத்தரவு!"

அசாம் மாநிலத்தில் கொரோனாநோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் உறவினர்கள் மருத்துவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்!
 
doctor

தற்போது நான் இந்தியாவில் மக்களின் மத்தியில் அதிகமாக பேசப்படும் வார்த்தையாக கொரோனா உள்ளது. இந்த நோய்க்கு எதிராக பல்வேறு மருத்துவர்கள் செவிலியர்கள் முன் களப்பணியாளர்கள் போலீசார் போன்றோர் மிகுந்த இக்கட்டான சூழலிலும் தங்களது பணியினை மிகவும் திறம்பட செய்து வருகின்றனர். மேலும் மக்களுக்கு நோய் வராமல் பாதுகாக்க பல்வேறு விதமான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்கள் செவிலியர்கள் அவ்வப்போது தாக்கப்படுவது வேதனை அளிக்கிறது.doctor

மேலும்  உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவரை அடிப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கும் காரியமாக காணப்படுகிறது. இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது .அதன்படி அசாம் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மூன்று மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 24 பேர் அந்த மருத்துவரை சட்டையை கிழித்து சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர்.

மேலும் அவரை தடுக்க வந்த மருத்துவ ஊழியர்கள் அனைவரையும் அவர்கள் அங்குள்ள பாத்திரங்களாலும் பொருட்கள் காட்டுமிராண்டித்தனமாக அடித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் இந்திய நாடெங்கும் மிகவும் வேகமாக பரவியது. இதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் இதனை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் அசாம் மாநில முதல்வர் தற்போது அந்த 24 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதன்படி அங்குள்ள தாக்கிய அந்த உறவினர்கள் 24 பேரை அங்குள்ள போலீசார் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு உயிர் போனால் மருத்துவரே காரணம் என்று உறவினர்களும் நண்பர்களும் எண்ணி அந்த மருத்துவரையே அடிப்பதே மிகுந்த வேதனையாக காணப்படுகிறது.

From around the web