லாக்கரை உடைக்கும் உரிமை வங்கிக்கு உண்டு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

 
reserve bank

வாடிக்கையாளரின் லாக்கரை உடைக்க உரிமை வங்கி அதிகாரிகளுக்கு உண்டு என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கிகளில் லாக்கருக்கு வாடகை வசூலிக்கப்படும் என்பது தெரிந்ததே, அந்த வகையில் மூன்று வருடங்கள் வாடகை கட்டாமல் இருந்தால் வங்கி லாக்கரை உடைக்கும் உரிமை வங்கி அதிகாரிகளுக்கு உண்டு என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் வங்கி லாக்கரில் ஆபத்தான பொருட்களை வைக்கக்கூடாது என்றும் சட்டவிரோதமான பொருட்களை வைக்கக்கூடாது என்றும் மீறினால் வாடிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வங்கி லாக்கர் இயற்கை சீற்றத்தினால் அதாவது வெள்ளம். மழை. இடி மின்னல் ஆகியவற்றால் சேதமடைந்தால் அதற்கு வங்கி பொறுப்பாகாது என்றும் ஆனால் அதே நேரத்தில் வங்கி ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக வங்கி லாக்கரில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்தால் கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு நஷ்ட ஈடு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய விதிகள் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web