அடைமழை பெய்து அருவியில் தடை விதிப்பு!சுற்றுலா பயணிகள் வருத்தம்!

நேற்று இரவு பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது!
 
அடைமழை பெய்து அருவியில் தடை விதிப்பு!சுற்றுலா பயணிகள் வருத்தம்!

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதற்கேற்ப இந்திய திருநாட்டில் எல்லா வளங்களும் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் அனைத்து வளங்களும் மிகுந்த மாநிலமாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் பல பகுதிகள் சுற்றுலாத் தலமாக உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி ஆனது தமிழ் மட்டும் இந்தியர்கள் மட்டுமன்றி உலக சுற்றுலா விரும்பிகளின் பார்வையும் ஈர்த்துள்ளது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம் தான். அதுவும் குறிப்பாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஆனது அனைத்து சுற்றுலா விரும்பிகளின் ஏற்கப்பட்டு கூட்டங்கள் வந்து செல்லப்படுகின்றன.

rain

 தமிழகத்தில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் தெரிகிறது. ஒரு சில பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயில் தாக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. இது மத்தியில் தமிழகத்தில் சில தினங்களாக ஒரு சில பகுதிகளில் மழையும் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடையில் மழை பெய்தது மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது மட்டுமல்லாமல் குடி நீரின் அளவும் நிலத்தடி நீரின் அளவும் அதிகரித்துள்ளது மிகவும் சந்தோஷமான செய்தியாக காணப்படுகிறது.

தொடர்ந்து நேற்றைய தினம் கன மழை பெய்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தகவல்.  இச்சம்பவமானது தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் தற்போது கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்  கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன மழை பெய்தது சந்தோஷமாக இருப்பினும் தற்போது சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதித்துள்ளது சிறிது கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web