லெபனானை அடுத்து அமெரிக்காவில் வெடிவிபத்து: ஒருவர் பலி, பலர் காயம்

சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட் என்ற நகரில் அமோனியம் நைட்ரேட் குடோனில் வெடித்த வெடி விபத்து மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கியது என்பதும் இந்த வெடிவிபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் லெபனானை அடுத்து அமெரிக்காவிலும் மிகப்பெரிய அளவில் கேஸ் வெடிகுண்டு விபத்து ஒன்று நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் என்ற பகுதியில் சற்று முன்னர் கேஸ் வெடி விபத்து நடந்துள்ளது. இதில் ஒரு சில
 

சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட் என்ற நகரில் அமோனியம் நைட்ரேட் குடோனில் வெடித்த வெடி விபத்து மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கியது என்பதும் இந்த வெடிவிபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் லெபனானை அடுத்து அமெரிக்காவிலும் மிகப்பெரிய அளவில் கேஸ் வெடிகுண்டு விபத்து ஒன்று நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் என்ற பகுதியில் சற்று முன்னர் கேஸ் வெடி விபத்து நடந்துள்ளது. இதில் ஒரு சில வீடுகள் தரைமட்டமாகின என்பதும் ஒருவர் பலியாகி உள்ளார் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது

இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த அமெரிக்க தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் தீவிரமாக உள்ளனர். இந்த வெடி விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web