நெல்லையில் பிறை: தமிழகத்தில் ஆகஸ்ட் 12-ல் பக்ரீத் பண்டிகை என அறிவிப்பு!

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை வரும் 12-ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இறைவனின் தூதரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான துல் ஹஜ் மாதம் 10-ஆம் நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பிறை தென்பட்டதை தொடர்ந்து வரும் 12 ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை ஹாஜி வெளியிட்ட அறிக்கை:
 

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை வரும் 12-ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். 


இறைவனின் தூதரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான துல் ஹஜ் மாதம் 10-ஆம் நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

நெல்லையில் பிறை: தமிழகத்தில் ஆகஸ்ட் 12-ல் பக்ரீத் பண்டிகை என அறிவிப்பு!


இந்நிலையில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பிறை தென்பட்டதை தொடர்ந்து வரும் 12 ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை ஹாஜி வெளியிட்ட அறிக்கை: துல்கஃதா மாதம் 29-ம் தேதி, ஆங்கில மாதம் ஆக.2-ம் தேதி மாலை, துல்ஹஜ் மாத பிறை, திருநெல்வேலி மேலப்பாளைத்தில் காணப்பட்டது. எனவே, ஆக.3-ம் தேதி சனிக்கிழமை அன்று துல்ஹஜ் மாத முதல் பிறை ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆக. 12- ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். 

From around the web