திஷா ரவிக்கு ஜாமீன்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

 

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக சமூக செயற்பாட்டாளர் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமின் எடுத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

டெல்லி காவல்துறை சமீபத்தில் திஷா ரவி என்பவரை கைது செய்தது. அவர் டூல்கிட்டை பயன்படுத்தி விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறையை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது

இந்த நிலையில் திஷா ரவி தனக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் திஷா ரவியின் ஜாமீன் மனுவுக்கு டெல்லி காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது 

disha

விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறைக்கும் திஷா ரவிக்கும் தொடர்பு உள்ளது என்று காவல்துறை கூறிய நிலையில் அதற்கு என்ன சான்று என்று நீதிபதி கேட்க அதற்கு காவல்துறை கூறிய பதிலில் நீதிபதி திருப்தி அடையவில்லை என்று கூறப்படுகிறது

மேலும் திஷா ரவி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் எனவே அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை தடைப்படும் என்றும் காவல் துறை தெரிவித்தது 

இந்த நிலையில் திஷா ரவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து திஷா ரவி இன்று அல்லது நாளை காலை விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திஷா ரவி மீதான வழக்கின் தீர்ப்பு எப்போது வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web