திருமாவளவனுக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது: பிக்பாஸ் நடிகை

 

திருமாவளவனுக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்து பெண்களை அவதூறாக பேசியதாக திருமாவளவன் மீது குற்றம் சாட்டி பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சிதம்பரத்தில் போராட்டம் நடத்தச் சென்ற பாஜக பிரபலம் மற்றும் நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்

இந்த நிலையில் திருமாவளவன் குறித்து பாஜக பிரபலமும் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்திரி கூறியபோது ’திருமாவளவனுக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது என்று கூறினார்

இன்று சென்னையில் நடந்த பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காயத்ரி ரகுராம், திருமவளவன் குறித்து இவ்வாறு கூறியதை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் திமுக அதிமுக கூட அமைதியாக இருக்கும் நேரத்தில்  ஒற்றை இலக்க சதவீதத்தில் வாக்குகளை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பாஜகவும் மோதிக்கொள்வதை அரசியல் விமர்சகர்கள் வேடிக்கையாக பார்த்து வருகின்றனர் 

From around the web