பாபர் மசூதி வழக்கு: மேல்முறையீடு செய்யுமா சிபிஐ?

 

கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியானது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது 

இந்த தீர்ப்பு குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது

இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. ஆனால் சிபிஐ சிபிஐ வட்டாரத்தில் இதுகுறித்து கேட்டபோது நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரங்கள் நகல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அந்த நகல் கிடைத்தவுடன் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அதன் பிறகு மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்

இந்த வழக்கில் மேல் சிபிஐ மேல்முறையீடு செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 

From around the web