ஹிந்தி தெரியாதவர்களை வெளியேற சொன்னேனா? ராஜேஷ் கோட்சே விளக்கம்

இந்தி தெரியாதவர்களை தான் வெளியேறுமாறு கூறவில்லை என்றும், அது திரித்துக் கூறப்பட்ட தகவல் என்றும் இந்த நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் சிலர் கலந்து கொண்டு இருந்ததால் அவர்களை மட்டும் வெளியேறுமாறு கூறினேன் என்றும் ராஜேஷ் கோட்சே விளக்கம் அளித்துள்ளார் சமீபத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் யோகா மற்றும் இயற்கை வைத்தியம் குறித்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் 38 பேர் உள்பட மொத்தம் 350 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ஆயுஷ் செயலாளர்
 

ஹிந்தி தெரியாதவர்களை வெளியேற சொன்னேனா? ராஜேஷ் கோட்சே விளக்கம்

இந்தி தெரியாதவர்களை தான் வெளியேறுமாறு கூறவில்லை என்றும், அது திரித்துக் கூறப்பட்ட தகவல் என்றும் இந்த நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் சிலர் கலந்து கொண்டு இருந்ததால் அவர்களை மட்டும் வெளியேறுமாறு கூறினேன் என்றும் ராஜேஷ் கோட்சே விளக்கம் அளித்துள்ளார்

சமீபத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் யோகா மற்றும் இயற்கை வைத்தியம் குறித்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் 38 பேர் உள்பட மொத்தம் 350 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கோட்சே, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது

ஆனால் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் மட்டும் பேசுமாறும் தங்களுக்கு இந்தி தெரியாது என்றும் கூறினார்கள். இதற்கு ராஜேஷ் கோட்சே விளக்கம் கொடுத்த போது ஆங்கிலம் இந்தி என மாறி மாறி பேசுவதாக கூறினார்

இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு சம்பந்தம் இல்லாத சிலர் திடீரென்று உள்ளே புகுந்து ஆங்கிலத்தில் மட்டும் பேச வேண்டும் என கோரிக்கை விடுத்து தன்னை கேலி செய்வதாகவும் இருப்பினும் அவர்களிடம் நான் இரு மொழிகளில் பேச முயற்சி பெற்றேன் என்று கூறியதாகவும் ஒருவேளை இந்தி தெரியாதவர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறலாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொண்டேன் என்றும் ஆனால் என்னுடைய பேச்சு மொழித்திணிப்பு என திரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் கூறியுள்ளார்

ஏற்கனவே இந்திக்கு எதிராக குரல் கொடுத்து அதனை அரசியலாக்கி வரும் திமுக தலைவர்கள் இந்த பிரச்சனையை வேண்டுமென்றே பெரிதாக்கி விட்டார்களோ என்று நெட்டிசன்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web