சுதந்திர தினத்தன்று அபிநந்தனுக்கு மத்திய அரசு விருது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேரை பயங்கரவாதிகள் தற்கொலைப்பட தாக்குதல் மூலம் கொன்றனர்.பதிலடியாக இந்திய விமானப் படை மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாதிகள் தங்கியிருக்கும் முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இதையெடுத்து இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் எப்-16 ரக விமானங்கள் தாக்குதல் நடத்த முயன்ற போது இந்திய விமானங்களின் மூலம் விரட்டி அடிக்கப்பட்டு பதில் தாக்குதல் நடத்தப் பட்டது. அதில் இந்திய விமானப் படை
 
சுதந்திர தினத்தன்று அபிநந்தனுக்கு மத்திய அரசு விருது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேரை பயங்கரவாதிகள் தற்கொலைப்பட தாக்குதல் மூலம் கொன்றனர்.பதிலடியாக இந்திய விமானப் படை மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாதிகள் தங்கியிருக்கும் முகாம்களில் தாக்குதல் நடத்தியது.

இதையெடுத்து இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் எப்-16 ரக விமானங்கள் தாக்குதல் நடத்த முயன்ற போது இந்திய விமானங்களின் மூலம் விரட்டி அடிக்கப்பட்டு பதில் தாக்குதல் நடத்தப் பட்டது.

சுதந்திர தினத்தன்று             அபிநந்தனுக்கு மத்திய அரசு விருது

அதில் இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனும் ஒருவர் ஆவார். அபிநந்தன் பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இராணுவ வரலாற்றில் எப்-16 ரக விமானத்தை மிக்-21 ரக விமானம் சுட்டு வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும்.

அபிநந்தன் விமானத்தில் ஏற்பட்ட பழூது காரணமாக பாகிஸ்தான் எல்லைக்குள் விமானம் விழுந்தது.பாகிஸ்தான் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார் அபிநந்தன்.

அங்கு பாகிஸ்தான் இராணுவத்தினர் வற்புறுத்தியும் இந்திய இராணுவ ரகசியங்களை அவர் கூற மறுத்துவிட்டார்.

 இந்திய அரசின் அழுத்தம் காரணமாக 60 மணி நேரத்திற்கு பின்னர் அபிநந்தன் இந்திய எல்லைக்குள் திரும்ப வந்தடைந்தார். பின்னர் தீவிர பரிசோதனைக்கு பிறகு இராணுவ விமானப் படையில் மறுபடியும் சேர்க்கப்பட்டார். 

அபிநந்தனின் வீர செயலுக்காக சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு மத்திய அரசு “வீர் சக்ரா” விருது வழங்கவுள்ளது.

From around the web