மருத்துவமனையில் தீ விபத்தை தவிருங்கள்! முக்கியமா இங்கே தீ விபத்து இருக்கவே கூடாது!

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது!
 
fire

தற்போது நாடெங்கும் பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள்அதிகமாக காணப்படுகின்றனர்.காரணம் கொரோனா  நோயின் தாக்கம் ஆனது சில தினங்களாக வேகமாக அதிகரித்து மக்களை மீண்டும் அச்சத்திற்கும் தள்ளியுள்ளது. எனினும் இந்த கொரோனா நோயானது கடந்த ஆண்டு நம் நாட்டில் பரவ தொடங்கியது .ஆனால் இந்திய அரசின் பெருமுயற்சியால் இந்நோயானது கடந்த ஆண்டின் இறுதிக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. எனவே இந்திய மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.government

ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து மீண்டும் கொரோனா  அதிகரித்துள்ளது. கொரோனா  எதிராக பல்வேறு மாநில அரசுகளும் பல கட்டுப்பாட்டு விதிகளுடன் இந்நோய்க்கு எதிராக போராடுகிறது. இந்நிலையில் மத்திய அரசானது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டுப்பாடுகளையும் தீவிரமாக கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது. அதன்படி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

மேலும் முக்கியமாக கொரோனா நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளில் தீ விபத்தை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு தன் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளது. மேலும் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை உள்ளிட்ட சுகாதார அமைப்புகளில் தீ விபத்தை தடுக்க விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

From around the web