பார்வையாளர்கள் சோகம்! ஒலிம்பிக்கில் கட்டுப்பாடு!

ஜப்பானின் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்காக அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது!
 

உலக நாடுகள் அனைத்தும் மிகவும் போட்டி போட்டு கொள்ளும் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்ச்சி ஒலிம்பிக் போட்டியாகும். இந்த ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். இந்த ஒலிம்பிக் போட்டியில் அதிகமாக அமெரிக்காவும் ரஷ்ய நாடுகளுமே  தங்கப்பதக்கங்களை வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக் காணப்படும். போட்டியாக சீனா ஜப்பான் போன்ற நாடுகளும் தங்கப் பதக்கங்களையும் வெள்ளி பதக்கங்களை பெற்று காணப்படும்.

olympics

 ஒலிம்பிக் போட்டியானது இந்த ஆண்டு ஜப்பான் நாட்டில் நடைபெற உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ பகுதியில் இந்த ஒலிம்பிக் நடைபெற உள்ளது . இந்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .மேலும் ஜப்பான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பார்வையாளருக்கு அனுமதியை வழங்க மறுத்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர் . மேலும் ஜப்பான் அரசானது  கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளை காண அனுமதி மறுக்கப்பட்டதாக கூறுகிறது. இதனால் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

From around the web