அத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்க கூடாது- மடாதிபதிகளின் புதிய கோரிக்கை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை உள்ளது. இது முழு அத்திமரத்திலானது என கூறப்படுகிறது. இந்த சிலை கடந்த காலங்களில் அந்நியர் படையெடுப்பின்போது அதற்கு பயந்து குளத்தில் புதைத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 1939ல் இருந்துதான் இந்த சிலை 40 வருடங்களுக்கு ஒரு முறை எடுத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. தண்ணீருக்குள் இந்த சிலை எந்த வித சேதமும் இல்லாமல் 40 வருடங்கள் அப்படியே இருப்பது ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 40 வருடத்துக்கு பின் கடந்த
 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை உள்ளது. இது முழு அத்திமரத்திலானது என கூறப்படுகிறது. இந்த சிலை கடந்த காலங்களில் அந்நியர் படையெடுப்பின்போது அதற்கு பயந்து குளத்தில் புதைத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்க கூடாது- மடாதிபதிகளின் புதிய கோரிக்கை

1939ல் இருந்துதான் இந்த சிலை 40 வருடங்களுக்கு ஒரு முறை எடுத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. தண்ணீருக்குள் இந்த சிலை எந்த வித சேதமும் இல்லாமல் 40 வருடங்கள் அப்படியே இருப்பது ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 40 வருடத்துக்கு பின் கடந்த 1979க்கு பிறகு இப்போது அத்திவரதர் மீண்டும் காட்சி கொடுத்து வருகிறார்.

48 நாட்கள் முடிந்த பின் மீண்டும் அத்திவரதர் தண்ணீருக்குள்ளே வைக்கப்படுவார் வரும் ஆகஸ்ட் 17க்கு பின் 48 நாட்கள் முடிவடையும். அதன் பின்னே இந்த வைபவங்கள் நடைபெறும்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் உட்பட மடாதிபதிகள் புதிய கோரிக்கையை அரசுக்கு வைத்துள்ளனர். முன்பு அந்நியர் படையெடுப்புக்காக இவை இவை மறைத்து வைக்கப்பட்டன. தற்காலத்தில் அது தேவையில்லை அதனால் தண்ணீருக்குள் அத்திவரதர் சிலையை வைக்க வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார். இதை வேறு சில மடாதிபதிகளும் ஆமோதித்துள்ளனர்.

விரைவில் அனைத்து மடாதிபதிகளும் முதல்வரை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.

From around the web