உத்திரபிரதேசத்தில் கொடூரம்! விஷ சாராயம் குடித்த 11 பேர் கொடூர பலி!

உத்தரபிரதேச மாநிலத்தில் விஷயம் குடித்த 11 பேரும் பலியாகியுள்ளதாக தகவல்!
 
liquor

தற்போது மக்கள் மனதில் நல்ல விஷயங்களை விட தீய விஷயங்களை அதிகமாக உருவாகி காணப்படுகிறது. அதுவும் அறிவியல் கண்டுபிடிப்புகளை மக்கள் நல்ல விதத்தில் பயன்படுத்தாமல் தவறான கருத்துக்கு பயன்படுத்துவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் அதனை கொண்டு கொலை செய்வதும் சிலரை தூண்டுவதும் ஏற்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் பல்வேறு மாநில அரசுகளும் மதுபானம் காய்ச்சுவதற்கு மிகுந்த தடையும் காய்ச்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் கைதும் செய்து வருகின்றன.death

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் விஷ சாராயம் குடித்து 11 பேர் தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் அலிகர் மாவட்டம் லோதா அருகே தொழிலாளர்கள் டிராக்டர் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 11 பேரும் இந்த விஷம் குடித்தனர். இவர் குறித்த இந்த பதினோரு பேரும் தற்போது பலியாகியுள்ளனர். மேலும் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் பலர் காசியா மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 உரிமை பெற்ற மது விற்பனையாளரிடம் இருந்து சாராயத்தை வாங்கி அருந்தியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும் இதனை போலீசார் டிஐஜி தீபக் குமார் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதனால் அந்த விஷ சாராய கொடுத்த மது விற்பனையாளரின் உரிமமும் ரத்து செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது போன்று மக்கள் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் அனைவருக்கும் வலியுறுத்தப்படுகிறது ஆயினும் பலரும் இது போன்ற செயல்களை செய்து தங்கள் உயிரினும் இல்லாமல் மதுவிற்கு அடிமையாகி தங்களது குடும்பத்தை விட்டு செல்கின்றனர்.

From around the web