உலக சைக்கிள் தினத்தில் மூடப்பட்ட அட்லஸ் சைக்கிள் நிறுவனம்: அதிர்ச்சி காரணம்

இந்தியாவில் ஹீரோ, அட்லஸ், ஹெர்குலஸ் ஆகிய மூன்று சைக்கிள் நிறுவனங்கள் மட்டுமே முன்னணியில் இயங்கிவரும் நிலையில் அவற்றில் ஒன்றான அட்லஸ் சைக்கிள் நிறுவனம் ஜூன் 3-ம் தேதியுடன் மூடப்பட்டதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பெரும் நிதிச் சுமை காரணமாக இந்நிறுவனம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் இந்தியாவில் சைக்கிள் பிரியர்கள் குறைந்துவிட்டதால் இந்த நிறுவனம் மூடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜூன் 3ஆம் தேதி என்பது உலக சைக்கிள் தினம்
 

உலக சைக்கிள் தினத்தில் மூடப்பட்ட அட்லஸ் சைக்கிள் நிறுவனம்: அதிர்ச்சி காரணம்

இந்தியாவில் ஹீரோ, அட்லஸ், ஹெர்குலஸ் ஆகிய மூன்று சைக்கிள் நிறுவனங்கள் மட்டுமே முன்னணியில் இயங்கிவரும் நிலையில் அவற்றில் ஒன்றான அட்லஸ் சைக்கிள் நிறுவனம் ஜூன் 3-ம் தேதியுடன் மூடப்பட்டதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பெரும் நிதிச் சுமை காரணமாக இந்நிறுவனம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் இந்தியாவில் சைக்கிள் பிரியர்கள் குறைந்துவிட்டதால் இந்த நிறுவனம் மூடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஜூன் 3ஆம் தேதி என்பது உலக சைக்கிள் தினம் கொண்டாடப்படும் நாள் ஆகும். இந்த நாளில் அட்லஸ் நிறுவனம் மூடப்பட்டு இருப்பது அனைவருக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது. மாதமொன்றுக்கு 2 லட்சம் சைக்கிள்களை உற்பத்தி செய்துவந்த இந்நிறுவனம் பைக்குகள் அதிகரிப்பு காரணமாக சைக்கிள் விற்பனை குறைந்து விட்டதாகவும் அதனால் நிறுவனத்தின் லாபம் பெருமளவு குறைந்து விட்டதாகவும் இதனால் நிறுவனத்தை மூட முடிவு செய்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது

From around the web