இதே வேகத்தில் போனால் மே எட்டில் 4.4 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்!

தற்போதைய வேகத்தில் கொரோனா அதிகரித்தால் வரும் மே 8-ஆம் தேதிக்குள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4.4 லட்சம் ஆகிவிடும் ஆய்வு!
 
இதே வேகத்தில் போனால் மே எட்டில் 4.4 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்!

சில தினங்களாக இந்தியாவில் ஆட்கொல்லி நோயின் தாக்கம் மீண்டும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆட்கொல்லி நோயான கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவின் பெரும் முயற்சியினால் கட்டுப்படுத்தப்பட்டது. ஆட்கொல்லி நோய் என்று அழைக்கப்படுவது கண்ணுக்குத் தெரியாத கொரோனா.கொரோனா மீண்டும் இரண்டாவது அலை பரவிவருகிறது. இதனால் நாடே மிகவும் அச்சத்தில் உள்ளன. மேலும் இதற்கு எதிராக போராடும் வண்ணமாக பல மாநில அரசுகளும் பல்வேறு உத்தரவுகளையும் தடைகளையும் பிறப்பித்து வருகின்றனர்.IIT

மேலும் ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கும் ஒருசில மாநிலங்களில் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது. தற்போது எதிராக பல நாடுகளும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டுகின்றன. எனினும் இத்தகைய தடைகள் கட்டுப்பாடுகள் விதித்தாலும் தனது உச்சத்தை எட்டியது. இந்நிலையில் இந்த நோய் குறித்து தற்போது ஐஐடி  ஆய்வு செய்துள்ளது. அதன்படி தற்போதைய வேகத்தில் அதிகரித்து வந்தால் வரும் எட்டாம் தேதி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4.4 லட்சம் ஆகிவிடும் என்று கூறியுள்ளது.

மேலும் குர்ஆனை தொடர் பரவல் குறித்து ஆய்வு மேற்கொண்ட கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் குழு இதனை தெரிவித்துள்ளது மேலும் மே 14லிருந்து 18 ஆம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா   இரண்டாவது அலையின் பாதிப்பானது மிகவும் உச்சத்தை எட்டும் என்று கருதுகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் போது மொத்தம் இந்தியாவில் 48 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள் என்றும் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.

ஏப்ரல் 18 லிருந்து 25க்குள் பாதிப்பு அதிகரித்து  மூன்று லட்சத்து 20 ஆயிரத்து 219 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12ஆம் தேதி 20000மாக இருந்த கொரோனா ஏப்ரல் 25-ம் தேதியில் 3.2 லட்சமாக அதிகரித்து விட்டது. மேலும் தற்போதைய வேதத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட்டால் மொத்த பாதிப்பு 48 லட்சத்தை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web